இலங்கையிலும் உலக நாடுகளிலும் அக்டோபர் 1ம் தேதி “உலக சிறுவர் தினம்” கொண்டாடப்படும் நிலையில், இவ்வாண்டு “அன்புடன் காப்போம் – உலகை வெல்வோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் சிறுவர் தொடர்பான தேசிய நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் நெறிப்படுத்தலிலும், நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், அனைத்து தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உலக சிறுவர் தின நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அதற்கமைய, 2025 செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை “சிறுவர் தின தேசிய வாரம் – 2025” எனப் பிரகடனப்படுத்தி, தேசிய வைபவம் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.








