சந்தையில் நிலவும் கீரி சம்பா பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸா தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் பேசிய அவர், கீரி சம்பா பயிரிடுதல் 7% மட்டுமே மேற்கொள்ளப்பட்டதால் உற்பத்தி குறைந்துள்ளதெனவும், இருப்பினும் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் பற்றாக்குறை எதுவும் இல்லையெனவும் கூறினார்.

மேலும், 40,000 மெட்ரிக் தொன் கீரி சம்பாவை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் இறக்குமதி செய்யப்படுமெனவும், ஆனால் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here