யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இளைஞர் குழுவொன்றின் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று இரவு நெடுந்தீவு பகுதியிலுள்ள தனியார் விருந்தகமொன்றின் மதுபானசாலைக்குள் நுழைந்த இளைஞர் குழு, அங்கு இருந்த மற்றொரு குழுவினரை தாக்கியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் ஒருவரை கைதுசெய்துள்ளனர். இதற்கிடையில், தாக்குதலில் ஈடுபட்ட பிற இளைஞர்கள் தப்பிச் சென்றதாகவும், அவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் நெடுந்தீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.








