கல்வி அமைச்சு அறிவிப்பின்படி, 2026 ஆம் ஆண்டின் முதலாம் தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் ஜனவரி 20, 2026 முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.
அந்த நாளுக்குள், தரம் ஒன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
நிகழ்வின் வரவேற்பு நிகழ்ச்சி விவரங்களாக;
தரம் இரண்டைச் சேர்ந்த மாணவர்கள் புதிய மாணவர்களை வரவேற்பர்.
பெற்றோர் மற்றும் விருந்தினர்கள் வரவேற்பு, தேசிய மற்றும் பாடசாலை கொடியேற்றம், தேசிய கீதம் மற்றும் பாடசாலை கீதம் நிகழ்ச்சி பகுதியாக நடைபெறும்.
ஆரம்பக் கல்வி மறுசீரமைப்பு மற்றும் தரம் ஒன்றின் புதிய கலைத்திட்ட குறிக்கோள்கள் பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.
புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி ஆரம்ப பிரிவு மாணவர்களின் பங்கேற்புடன் கலை நிகழ்ச்சியாக நடைபெறும்.
நிகழ்ச்சியின் போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எந்தவொரு அசௌகரியமும் ஏற்படாது என்பதை உறுதி செய்ய கவனம் செலுத்தப்படும்.
பாடசாலையின் அனைத்து பிரிவுகள், அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் இணைந்து செயல்படும்.
புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட “ஆரம்ப பாடசாலைக்கு மகிழ்ச்சிகரமான தொடக்கம்” நிகழ்ச்சித்திட்டம் ஜனவரி 2 முதல் 16, 2026 வரை (அரசு விடுமுறை தினங்கள் தவிர) நடைமுறைப்படுத்தப்படும்.
நிகழ்ச்சித்திட்ட முடிந்த பின்னர், தரம் ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் நிகழ்ச்சிகளை நெகிழ்வுத் தன்மையுடன் நடத்த ஆலோசனை வழங்கப்படும்.
கல்வியமைச்சு, இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற அனைவரிடமும் முழு ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







