2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தத்தில் இலங்கை சமீபத்தில் (நவம்பர் 09) சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் கையெழுத்திட்டது.

இலங்கை பிரதிநிதிகள் குழுவில் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதியமைச்சர் முநீர் முலாஃபர் மற்றும் சவூதி ஹஜ் மற்றும் உம்ரா பிரதி அமைச்சர் கலாநிதி அப்துல்பத்தா பின் சுலைமான் மஷாத் ஆகியோர்  இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் மூலம் 2026 ஹஜ் பயணத்தில் பங்கேற்கும் இலங்கை யாத்ரீகர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் சேவைகளை இரு நாடுகளும் உறுதிசெய்வதை கோடிட்டுக் காட்டுகிறது. கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஹஜ் கோட்டா 3,500 ஆகும்.

கையொப்ப நிகழ்வில், 2025 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்திற்காக சவூதி அதிகாரிகள் செய்த சிறந்த ஏற்பாடுகளுக்கு துணை அமைச்சர் முநீர் முலாஃபர் பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும் 2026 ஹஜ் பயணத்தை வெற்றிகரமாக நடத்த ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்துடன் இலங்கை நெருங்கிய ஒத்துழைப்பை தொடரும் என உறுதியளித்தார்.

இலங்கை ஹஜ் குழு தலைவர் ரியாஸ் மிகுலர் வரவிருக்கும் ஹஜ் பருவத்திற்கான ஒழுங்குமுறை பங்கு மற்றும் செயல்பாட்டு திட்டங்களை விரிவாக விளக்கினார்.

முனீர் முலாஃபர் சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் ஃபவ்ஸான் அல்ராபியாவுடன் சந்தித்து, ஹஜ் சேவை வழங்குநர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.

இலங்கை குழுவில் முஸ்லிம் மத மற்றும் கலாச்சார துறையின் இயக்குநர் எம்.எஸ்.எம். நவாஸ், ஜெட்டாவில் உள்ள பதில் தூதர் மஃபூசா லாபீர், மருத்துவ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அஸீஸ் முகமது ஷிஹான் மற்றும் ஹஜ் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.என்.எம். அஹ்ஸ்ரஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here