Friday, August 7, 2026
No menu items!

சவுதி அரேபியா

மக்காவுக்கு புனிதபயணத்திற்காக பயணித்த பேருந்து விபத்து- 42 இந்தியர்கள் பலி!

சவுதி அரேபியாவில் மக்காவுக்கு புனிதபயணத்திற்காக பயணித்த பேருந்து, டீசல் பாரவூர்தியுடன் மோதி விபத்திற்குள்ளாகியதில் 42 இந்தியர்கள் உயிரிழந்தனர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

2026 ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்து!

2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தத்தில் இலங்கை சமீபத்தில் (நவம்பர் 09) சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் கையெழுத்திட்டது. இலங்கை பிரதிநிதிகள் குழுவில் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதியமைச்சர் முநீர் முலாஃபர் மற்றும் சவூதி ஹஜ் மற்றும் உம்ரா பிரதி அமைச்சர் கலாநிதி அப்துல்பத்தா பின் சுலைமான் மஷாத் ஆகியோர்  இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இந்த...

சுகாதார அமைச்சில் சவுதி அரேபியா தூதருடன் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சந்திப்பு!

சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான சவுதி அரேபியா இராச்சியத்தின் தூதர் அதிமேதகு காலித் ஹமூத் நாசர் அல்கஹ்தானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு சமீபத்தில் சுகாதார அமைச்சில் நடைபெற்றது. இலங்கை – சவுதி அரேபியா இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால நட்புறவு, நாட்டின் சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கான தேவையான ஆதரவு குறித்து...

மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் இரு பெண்கள் கைது!

சவுதி அரேபியாவில் இருந்து நாட்டிற்கு வந்த பெண்கள் இருவர் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்று இரவு விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநாகல் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 35 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு...

கிறிஸ்டியானோ ரொனால்டோவை பார்ப்பதற்கு 13 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிளில் வந்த இரசிகர்!

உலகின் மிக பிரபலமான கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான இரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சீன இரசிகர் ஒருவர் ரொனால்டோவை நேரில் பார்ப்பதற்காக 13 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிளில் வந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ரொனால்டோ, கடந்த பெப்ரவரி மாதம் சீனா செல்வதாக இருந்தது. ஆனால்...

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த  சவுதி அரேபியாவின் முக்கிய தலைவர்கள்!

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றிக்கு சவுதி அரேபியாவின் முக்கிய தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். “இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் @KingSalman மற்றும் HRH பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக அரசியலமைப்புப் பிரமாணம் செய்துகொண்ட அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்” என்று...

இந்த ஆண்டின் முதல் குரங்கு காய்ச்சலை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது !

சமீபத்தில் சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய ஒருவருக்கு வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததை அடுத்து, இந்த ஆண்டின் முதல் குரங்கு காய்ச்சலை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது என்று சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ARY நியூஸ் தெரிவித்துள்ளது. மர்டானில் வசிக்கும் 34 வயதான ஆண் ஆகஸ்ட் 3 அன்று பாகிஸ்தானுக்கு வந்து, பெஷாவருக்கு வந்த சிறிது...

வெற்றி பெற்றது சவுதி அரேபியா அணி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் (21)  F குழுவின் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதில் இரண்டாவது போட்டியில் கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் சவுதி அரேபியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. சவுதி அரேபியா அணி சார்பாக மொஹமெட் கன்னோ 35 ஆவது...

மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ள ரஷ்ய ஜனாதிபதி

உக்ரைனில் போர் தொடங்கிய பின்னர் ரஷ்ய ஜனாதிபதி மீது  போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதால்  கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது வெளிநாட்டு பயணங்களை கடுமையாக மட்டுப்படுத்தியிருந்தார். எனினும்,  இன்று (06) மத்திய கிழக்கு நாடுகளான  சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு...
- Advertisement -spot_img

Latest News

பல்லன்சேன சிறைச்சாலையில் அமைதியின்மை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

கைதிகள் குழுவொன்று கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, நீர்கொழும்பு, தலுபொத, பல்லன்சேன திறந்த சிறைச்சாலை சுற்றுவட்டாரத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட...
- Advertisement -spot_img