செப்டம்பர் 24–25 ஆம் திகதிகளில்  22ஆவது திருத்த சட்டமூலம் மற்றும் நீதித்துறை சட்டமூலம் தொடர்பான விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

குறித்த சட்ட மூலங்கள் இரண்டாம் வாசிப்பின் போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் இன்று (10) பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவினால் எடுக்கப்பட்டது என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்பது முக்கியமாக நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை மாற்றியமைப்பதில் கவனம் செலுத்தும் ஒரு உத்தேச சட்டமாகும்.

நீதித்துறை (திருத்த) சட்டமூலம் என்பது உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நீதிமன்ற வழக்குகளின் தேக்கத்தை குறைக்கும் நோக்கில் நீதிபதிகளின் ஓய்வு வயதை சரிசெய்வதற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு முன்மொழியப்பட்ட சட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here