ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதும் 25 மாவட்டங்களிலும் ஜனாதிபதி காரியாலயங்கள் உருவாக்கப்படும் என பொலனறுவையில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் மாவட்ட ரீதியான காரியாலயங்களுக்குச் சென்று தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்ளக்கூடிய ஓர் பொறிமுறைமை உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வரலாற்றில் எந்தவொரு தலைவரும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்றியதில்லை.

தான் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே மக்களுக்கு சேவையாற்றத் தொடங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here