25 வயதுக்கு மேற்பட்ட நால்வரில் ஒருவர் வாழ்நாளில் பாரிசவாதத்தால் பாதிக்கப்படலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை!
25 வயதுக்கு மேற்பட்ட நால்வரில் ஒருவர், தமது வாழ்நாளில் குறைந்தது ஒருமுறை பாரிசவாத (Stroke) நோயால் பாதிக்கப்படக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
களுத்துறை போதனா மருத்துவமனையின் நரம்பியல் வைத்திய நிபுணர் டாக்டர் சுரங்கி சோமரத்ன தெரிவித்ததாவது,
“பாரிசவாத நோயாளிகளில் சுமார் 30% பேர் 20 முதல் 60 வயது வரையிலானவர்கள் ஆவர்,” என்றார்.
அவர் இந்த கருத்தை, வரும் அக்டோபர் 29ஆம் திகதி அனுசரிக்கப்படும் உலக பாரிசவாத தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
டாக்டர் சுரங்கி சோமரத்ன மேலும் கூறியதாவது:
“இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தினமும் குறைந்தபட்சம் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வது மிக அவசியம்.நடைபயிற்சி, உடல் உழைப்பு தேவைப்படும் விளையாட்டுகள், நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்றவை மிகச் சிறந்தவை.”என குறிப்பிட்டார்.
![]()