இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை நேற்று(04) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில், இறுதித் தொகுதியின் வாக்கெண்ணிக்கை இன்று(05) அதிகாலை 5.30 க்கு நிறைவடைந்தது.
இந்நிலையில் வௌியாகிய உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சி 240 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.
3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவிக்கையில் 3வது முறையாக வெற்றிபெறவைத்த மக்களுக்கும் பெரிய அளவிலான தேர்தல் பயிற்சியை நடத்திய இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேர்தல் செயல்முறை மற்றும் முறையின் நம்பகத்தன்மை குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.