மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஜ. டேசனின் 20 வது ஆண்டு நினைவேந்தல் தினம் .
மட்டு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு தூபியில் நேற்றைய தினம் (31) அவரின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந் நிகழ்வை மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்ததாக எமது பிராந்திய நிருபர் செய்தி வழங்கியுள்ளார்.
மேலும் இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கருணாகரன், முன்னால் பாராளு மன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா.சிறிநேசன், முன்னால் மாகாண சபை உறுப்பினர்களான இ.பிரசன்னா, இரா.துரைரெட்னம், தமிழ் தேசிய மக்கள் முன்;னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட அரசியல்வாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது.