பொலிவுட் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஷாருக்கான், தனது 33 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கைக்கு பின்னர், முதல் முறையாக பில்லியனர் பட்டியலில் இணைந்துள்ளார்.
Hurun India Rich List 2025 வெளியிட்டுள்ள பட்டியலின்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு தற்போது $1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,490 கோடி) ஆக உயர்ந்துள்ளது.
இந்த வளர்ச்சியுடன், ஷாருக்கான் இந்தியாவின் மிகச் செல்வந்த நடிகராக தொடர்ந்து இருக்கிறார். அதுமட்டுமன்றி, உலகளாவிய ரீதியில் பல சர்வதேச பிரபலங்களை கடந்துள்ளாரென அந்தப் பட்டியல் வலியுறுத்துகிறது.
உலகப் பிரபலங்கள் பலரையும் மிஞ்சிய நிலையில் உள்ள ஷாருக்கானின் நிகர மதிப்பு, டெய்லர் ஸ்விஃப்ட் ($1.3 பில்லியன்), அர்னால்ட் ஷ்வார்ஸ்னேக்கர் ($1.2 பில்லியன்), ஜெரி சைன்பீல்ட் ($1.2 பில்லியன்) மற்றும் செலீனா கோமேஸ் ($720 மில்லியன்) ஆகியோரையும் முந்தியுள்ளது.
திரைப்படங்கள், விளம்பரங்கள், தயாரிப்புப் பணி, உலகளாவிய பிராண்டுகளுடன் கூட்டாண்மைகள் என பலதரப்பட்ட வருவாய் மூலங்களின் மூலம், ஷாருக்கான் தனது செல்வத்தில் நிலையான வளர்ச்சியைப் பெற்றுள்ளார்.








