Tamil News Channel

வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர்! பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவிப்பு..!

IMG-20240629-WA0185
வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர் தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த  மண்ணில்  தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச  தமிரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் மக்களை  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றுமாலை  28.06.2024 சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.குறித்த சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத்தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
2005ம் ஆண்டு ஒருதலைமைத்துவத்திற்கு கீழ் செயற்பட்டு  அன்று உலகத்திற்கு ஒரு செய்தி சொல்லப்பட்டது.சில நாடுகள் அந்த செய்தியை ஜனநாய்கத்தை பயன்படுத்த தவறியதாகவும் குற்றம் சுமர்த்து கின்றன.யுத்தம் முடிந்தவுடன் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்து அவர்  தோல்வி அடைந்தார் அதற்கு பிறகு எங்களுக்காக அவர் எதனையும் இது வரை  கதைக்க வில்லை .மைத்திரி மகிந்த தேர்தலில் போட்டியிட்ட போது இரண்டும் எதிரி அதில் யாருக்கு ஆதரவளிப்பது என தீர்மானித்து மைத்திரிக்கு ஆதரவளித்தோம் அதிலும் தோற்றோம் அடுத்து சஜீத்துக்கு ஆதரவு அளித்தோம் அங்கும் இராஜதந்திரம் தோல்வியடைந்தது.
நாட்டில் அரகல போராட்டத்தைத்தொடர்ந்து டலஸ், ரணில் போட்டியிட்டபோது  டலஸ்க்கு ஆதரவு அளித்தோம்  அங்கும் தோல்வியடைந்தோம்.
மக்களிடத்தில் அபிவிருத்தி தேவையுள்ளது. மேடையில் அதைப்பற்றி நாங்க கதைக்க வில்லை உரிமைக்காகவே மக்கள் என்றும் வாக்களிக்கின்றனர்.எங்கள் சுகபோகத்திற்காக இல்லை
15வருட வரலாற்றில் அனுர சஜீத் ரணில் பேசிய வரலாறு இல்லை  ஆனால் இப்பொழுது பேசுகிறார்கள் அவர்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளது.
தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் நாங்கள் ஏன் பொது வேட்பாளரை இறக்கக்கூடாது.
13ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஜெய் சங்கருடன் கதைத்தோம் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சந்திக்கும் சஜீத் 13ஐ தருவதாக சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார் அப்பொழுது தமிழில் கேட்டார் பொலிஸ் அதிகாரமும் இருக்கா என்று சஜீத் இங்க இப்படி சொல்ல மரிக்கார் கொழும்பில் இவ்வாறு சொல்லவில்லை என்கிறார்.
தமிழ் நாட்டில் பொலிஸ் நிதி அதிகாரங்கள் இருக்கு எமக்கு இல்லை
வடக்கு மாகாண சபை முறைமை தான் 13இதில் மாகாணத்தில் தமிழ் பேசும் அதிகாரிகள் இல்லை
பொது வேட்பாளரை இறக்கும் போது வேட்பாளர்கள் இறங்கி வருவார்கள் 13ஐ விட மேலதிகமாக ஒன்றை தருகின்றோம்  என்று சொன்னால் அதைப்பற்றி யோசிப்போம் ஏற்கனவே உள்ள 13ஐ தருவம் என்று சொல்கிறார்கள்
34வருடமாக பொலீஸ் அதிகாரம் இல்லை காணி அதிகாரம் இல்லை மத்திய அரசாங்கம் காணிகளை பிடிக்கிறது
இலங்கைக்கு தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியாது. கிறிஸ்தவர் கூட வரமுடியாது. பெளத்தர் ஒருவர்  எங்கள் வேட்பாளர் எங்கள் மீது இனப்படுகொலை நடந்தது. சர்வதேச விசாரணை, காணாமல் ஆக்கப் ,வடக்கு கிழக்கில் சுயாட்சி
சிவாஜிலிங்கம் கேட்டார் அப்போது அவரை ஒருவரும் கணக்கு எடுக்கவில்லை குமார் பொன்னம்பலம் ஒரு இலட்சத்திற்கு மேல் கிடைத்தது.சிங்கள மக்கள் கூட வாக்களிக்கவுள்ளனர்.
ஒஸ்லோ பேச்சுவார்த்தை வடக்கு கிழக்கு மரபு வழி தாயகத்தில் அவர்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான தீர்வை பார்ப்போம் இதனை எந்தவொரு வேட்பாளர் பேசுவன் தருவன் என்று சொல்லாமல் பேசுவம் என்று சொல்லட்டும்
வரலாறு தந்திருக்கிற சந்தர்ப்பத்தை தவறாது இறுக்கியாக பிடித்து இந்த மண்ணில் நாம் யார் என்பதை காட்டலாம்
ரணிலுக்கு மகிந்த ஆதரவு சஜீத் இறங்கி போனால் அனுரவை நம்ப தயாரில்லை எமக்குரிய கருவி தமிழ் பொதுப்வேட்பாளர்.
தேர்தல் விஞ்ஞானபத்தில் எமக்கான தீர்வை  வெளியிட்டால் சிங்கள மக்களிடத்தில் செல்வாக்கு இல்லை என்றால்  இந்திய அமெரிக்க பிரித்தானியா  தூதுவருக்கு முன்னால் மறைமுகமாக தீர்வை  எழுதித்தாருங்கள்
ஏனைய ஒப்பந்தங்களை கிழித்து எறிந்தார்கள் இலங்கை ஒப்பந்தத்தை கிழித்து எறிய முடியாத நிலை காரணம் சர்வதேச ஒப்பந்தம் என கூறப்பட்டுள்ளது.எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts