இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 23 ஆவது போட்டி நேற்று நடைபெற்றது .

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இந்த போட்டியில் மோதின.

குறித்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தநிலையில் குறித்த போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொண்டதால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணித்தலைவர் சஞ்சு சாம்சனுக்கு 24 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 ஆவது முறையாக அந்த அணி விதி மீறலில் ஈடுபட்டுள்ளதால்,சஞ்சு சாம்சனை தவிர்த்து அணியில் விளையாடிய ஏனைய வீரர்களுக்கும் போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here