டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

படுகாயமடைந்த 160 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று முன்தினம் (08) இரவு அந்த விடுதியில் இசைக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்குக் கூடியிருந்தனர்.

இதில் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் , பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த சம்பவம் இடம்பெறும் போது குறித்த விடுதிக்குள் 500 முதல் 1,000 பேர் வரை இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தநிலையில், இடிபாடுகளுக்குள் சிக்குண்டு காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here