மாத்தளை – பலகடுவ பிரதேசத்தில் கஜமுத்துக்கள் மற்றும் முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற நான்கு சந்தேக நபர்கள் நேற்று (16.09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கஜமுத்துக்களும் 171 முத்துக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம்  என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குன்னேபான, யால்வெல ,கொத்மலை ,ரிகில்லகஸ்கட ஆகிய பிரதேசங்களை சேர்ந்த  30 , 38, 39, 43 வயதுடையவர்கள் ஆவர்.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக மாத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here