7 அரசு மருத்துவமனைகளில் CT ஸ்கேனர்கள் பழுதடைந்துள்ளதால் நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி இரத்தினபுரி பொது வைத்தியசாலை, கரவனெல்ல ஆதார வைத்தியசாலை, எம்பிலிப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலை, ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு, கல்முனை போதனா வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் களுத்துறை பொது வைத்தியசாலை ஆகிய இடங்களில் உள்ள CT ஸ்கேனர்கள் செயலிழந்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் நோயாளிகளை ஸ்கேன் அறிக்கைகளுக்காக வேறு வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதனால் அதிக செலவும் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







