இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியின் புதிய டி20 அணித் தலைவராக தற்போது உப தலைவராக உள்ள ஹார்திக் பாண்டியாவுக்கு பதில் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணி சம்பியனானதும் விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா மற்றும் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையிலேயே புதிய அணித் தலைவர் நியமிக்கப்படவுள்ளார்.
இந்திய அணியின் இலங்கைக்கு சுற்றுப்பயணம் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கௌதம் காம்பீரின் முதல் தொடராகவும் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








