குளவி கொட்டுக்கு இலக்காகி 8 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று (17.07) பிற்பகல் நோர்வுட் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. 9 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 4 மாணவிகளும் 4 மாணவர்களுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் பாடசாலையை முடித்துவிட்டு மீண்டும் வீடு செல்ல தயாராக இருக்கும் போது பாடசாலைக்கு அருகில் உள்ள மரமொன்றிலிருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here