சீகிரியா சிங்கப்பாதத்தில் குளவி கொட்டியதில் 26 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 70 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (14.08) சீகிரியாவை காண பெருமளவான மக்கள் வருகை தந்திருந்த நிலையில், சிங்கப்பாதத்திற்கு அருகில் குளவி கூடு களைந்து இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதன்படி, தற்போது சிகிரியாவுக்குள் நுழைவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








