Monday, May 25, 2026
No menu items!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணி

நான்கு வருடங்களுக்குப் பிறகு வைஸ் ராய் ஸ்பெஷல் ரயில்..!

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வைஸ் ராய் சிறப்பு ரயில் இன்று (22) மீண்டும் சேவையைத் தொடங்கியது. இந்த ரயில் இன்று காலை 7.00 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் புறப்பட்டு, 14 நாட்களுக்கு தீவைச் சுற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலா ரயில் என்று அழைக்கப்படும் இந்த ரயிலின் சிறப்பு என்னவென்றால்,...

தொடருந்து திணைக்களத்தின் புதிய தீர்மானம்..!

சுற்றுலாத் துறையையும் நீண்ட தூர சேவைகளையும் மேம்படுத்துவதற்காக தொடருந்து திணைக்களம் மேலதிகமாக தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மலைநாட்டு தொடருந்து மார்க்கம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமடைந்து வருவதாலும், அதன் வலுவான ஈர்ப்பு மற்றும் அந்த பயணத்திற்கான அதிக தேவை காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும்...

ரயிலில் மசாஜா?வெளியான காணொளி..!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரயிலில் மசாஜ் செய்வது போன்று காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து ரயில் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில்  ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவிக்கையில், இந்த ரயில் சுற்றுலாவுக்காக தனியார் நிறுவனம் ஒன்றினாால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களை கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு...

அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை..!

2024ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று(26) 20 இலட்சத்தை கடந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. தாய்லாந்திலிருந்து வந்த தம்பதியரால் அந்த இலக்கு அடையப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். டிசம்பர் மாதத்தின் முதல் 22 நாட்களில் 161,383 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இந்த காலப்பகுதியில் அதிகளவான...

அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,776,889 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 357,279 ஆகும். இது தவிர, ரஷ்யா, ஜேர்மனி, பிரிட்டன், அவுஸ்திரேலியா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!

மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நிலவும் இராணுவ நிலைமையைக் கருத்திற் கொண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமைய இந்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு...

குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 70 பேர்..!

சீகிரியா சிங்கப்பாதத்தில் குளவி கொட்டியதில் 26 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 70 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (14.08) சீகிரியாவை காண பெருமளவான மக்கள் வருகை தந்திருந்த நிலையில், சிங்கப்பாதத்திற்கு அருகில் குளவி கூடு களைந்து இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன்படி, தற்போது சிகிரியாவுக்குள் நுழைவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...
- Advertisement -spot_img