இலங்கையைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர் தனது 97ஆவது வயதில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லீலாவதி தர்மரத்ன கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற களனிப் பல்கலைக்கழகத்தின் 143ஆவது பட்டமளிப்பு விழாவில் பௌத்த கற்கைகளில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக, பட்டம் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லீலாவதி தர்மரத்ன, கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என தெரிவித்துள்ளார்.

லீலாவதி தர்மரத்ன இதற்கு முன்னர் ஆசிரியையாகவும் நோட்டரி அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here