தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் 500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் தேயிலை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசும் போது, கடந்த ஆட்சிகளில் தேயிலை தொழிற்துறையை மேம்படுத்துவதாகக் கூறி 1965 இலட்சம் ரூபாயும், உலக வங்கியிடம் இருந்து பெறப்பட்ட 48.9 மில்லியன் டொலர்களும் வீணாகச் செலவிடப்பட்டதைக் குறிப்பிட்டார்.

60 வேலைத்திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த நிதிகளை முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மனைவி, லக்ஷ்மன் செனவிரத்னவின் மகன் மற்றும் சாலிய திசாநாயக்கவின் மனைவி பெற்றுக் கொண்டதாகவும், இவர்களிடம் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here