பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் இன்றைய தினம்(10)  யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் இன்று முற்பகல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்னுமொரு அடக்குமுறை வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இப்போதாவது நீதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக கிளிநொச்சி, மன்னார் மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here