பெலியத்த – வீரகெட்டிய வீதியில், இன்று காலை 7.30 மணியளவில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து, உடனடியாக பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் சிலர் தற்போது சிகிச்சையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பேருந்து வீதியின் ஓரத்தில் மோதி நின்றுள்ளதாக தகவல் வழங்கியுள்ளார்.
தற்போது, 13 மாணவர்கள் பெலியத்த, பெலிகல்ல, தங்காலை மற்றும் வீரகெட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.








