நாட்டின் பல கடற்கரைப் பகுதிகளில், கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி முதல், 31 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, 5 விசைப்படகுகளும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, காவல்துறையினருடன், கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட மற்றுமொரு சுற்றிவளைப்பின் போது, 210 சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கீகரிக்கப்படாத வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டமை மற்றும் சட்டவிரோதமாக நீச்சலில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சோதனைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட மீன்பிடி வலைகள், மற்றும் உபகரணங்கள் என்பன, திருகோணமலை, கோட்-பே, மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் உள்ள மீன்வள மற்றும் நீர்வளத்துறை அலுவலகங்களிலும், குச்சிவெளி மற்றும் கந்தளாய் காவல்நிலையங்களிலும், சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here