கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 05 நிமிடங்களுக்குள் இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் மோட்டார் போக்குவரத்துத் துறையின் புதிய கிளை அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு மேல் நாட்டில் தங்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், கனரக வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றவர்கள், மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் முச்சக்கர வண்டி ஓட்ட அனுமதி பெற்றவர்கள் இங்கு முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப் பத்திரம் பெறலாம். விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி நேரத்தை மீதப்படுத்தலாம்.

அடுத்த சில மாதங்களில், பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு QR குறியீடு வழங்கப்படும். முன்னர், வீரஹெராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு செல்ல வேண்டியிருந்ததால் பயண நேரம் அதிகமாகும். இந்த புதிய அலுவலகம் பயணிகளின் நேரத்தை மீதப்படுத்தும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here