பத்து ஆண்டுகளாக நடத்தப்படாத மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையில் இதுகுறித்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாததால் பல மாகாண சபைகள் செயலிழந்துள்ளன. இதனை விரைவில் நடத்த வேண்டும் என்று நீதிமன்றங்களும் வலியுறுத்தியுள்ளன.

எனவே, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here