
இந்த மாதத்தின் கடந்த 10 நாட்களில், 77,482 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இந்தியர்கள் ஆவர்.
பிரித்தானியா, இத்தாலி, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,445,770 ஆக அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.







