ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இலங்கை அணி சிம்பாப்வே அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றது. பென் கரன் 79 ஓட்டங்களும், சீக்கந்தர் ராசா 59 ஓட்டங்களும் வழங்கினர்.
278 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, பெத்தும் நிஸ்ஸங்கவின் அபார சதத்தின் (122 ஓட்டங்கள்) துணையுடன் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியை பெற்றது.
முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியிலும் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது. இதனால், இரண்டு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 2-0 என கைப்பற்றியுள்ளது.
இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் செப்டம்பர் 3, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது.








