இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு இன்று (02) காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பில் தெரிவித்ததாவது,
சுகாதார அமைச்சு முன்பே தலையிட்டு நடவடிக்கை எடுக்க உறுதியளித்திருந்தாலும், அதனை செயல்படுத்தத் தவறியுள்ளது.மற்றும் பணிப்புறக்கணிப்பு காலத்தில் அவசர மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைகள் மட்டுமே வழமைபோல் இடம்பெறும். ஏனைய நாளாந்த சிகிச்சைச் சேவைகள் பாதிக்கப்படும்.
இதற்கிடையில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புவும் தங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக எச்சரித்துள்ளது.
அதன் செயலாளர் சாருதத்த இளங்கசிங்க, பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.








