நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் நான்கு வகை அலங்கார மீன்களுக்கு தடை விதிக்கும் வகையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு புதிய வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனை கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் கோலித ஜினதாச அறிவித்தார்.
தடை விதிக்கப்பட்ட மீன் இனங்கள் – பிரானா (Pirana), நைப் பிஸ் (Knife Fish), எலிகேடர் கார் (Alligator Gar), ரெட் லைன் ஸ்னேக் (Red Line Snake) ஆகும்.
மேலும், வரும் 20ஆம் திகதி முதல் இந்த மீன் இனங்களை இனப்பெருக்கம் செய்தல், நீர்நிலைகளில் விடுதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியனவும் முற்றாகத் தடை செய்யப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தடை விதிக்கப்படுவதன் மூலம் உள்ளூர் நீரியல் சூழலையும், மீன் இனங்களின் இயற்கை சமநிலையையும் பாதுகாக்கும் நோக்கம் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.








