ஆசியக் கிண்ணத்தின் நேற்றைய  (15) ஆட்டத்தில் இலங்கை அணி, ஹொங்கொங் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முக்கிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.

அணியின் சார்பில் நிசாகத் கான் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களை எடுத்தார். இலங்கை பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 150 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பில் வெற்றியை பெற்றது. துடுப்பாட்டத்தில் பத்தும் நிஸ்ஸங்க 44 பந்துகளில் 68 ஓட்டங்களுடன் சிறப்பாக விளங்கினார்.

இறுதிநேரத்தில் வனிந்து ஹசரங்க 9 பந்துகளில் 20 ஓட்டங்களை அதிரடியாக பெற்று வெற்றியை உறுதி செய்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாக பத்தும் நிஸ்ஸங்க தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த வெற்றியால் இலங்கை அணி சுப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்புகளை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here