யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி இன்று (17) காலை மல்லாகத்தில் நடைபெற்றது.

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நடைபவனி, மல்லாகம் விசலாட்சி வித்தியாலயத்தில் ஆரம்பமாகி, யாழ்–காங்கேசந்துறை வீதியூடாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதோடு, யாழ் காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரிவரை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையேற்றார். மேலும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பரா நந்தகுமார், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

நடைபவனியின் போது, யாழ்–காங்கேசந்துறை வீதியில் காணப்பட்ட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் டெங்கு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பரப்பப்பட்டது.

(யாழ் நிருபர்-லோஜன் விஜய்குமார்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here