இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 50 ஆறு ஓட்டங்களை விளாசிய முதல் வீரராக சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
நேற்று (21 செப்டம்பர்) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், அபிஷேக் இந்த மைல்கல்லை எட்டினார். இதுவரை 331 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில், அவர் 50 ஆறு ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இது வரை இந்த சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் எவின் லூயிஸ் தம் பெயரில் வைத்திருந்தார். அவர் 366 பந்துகளில் 50 ஆறு ஓட்டங்களை விளாசியிருந்தார்.
இந்த நிலையில், எவின் லூயிஸின் சாதனையை முறியடித்து அபிஷேக் சர்மா புதிய வரலாற்றை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.








