தங்காலை பகுதியில் இடம்பெற்ற விசேட பொலிஸ் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட லொறியொன்றிலிருந்து 200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த லொறி, போதைப்பொருளுடன் தங்காலை பகுதியில் இயக்கப்படுகையில், பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது.
மேலும் இதன்போது மேற்கொண்ட சோதனையின் போது, லொறியில் 6 நவீன துப்பாக்கிகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் ஆரம்ப விசாரணைகளின் படி, இந்த போதைப்பொருளும் ஆயுதங்களும் அமைப்புசார்ந்த குற்றக்குழுவொன்றுடன் தொடர்புடையவை என சந்தேகிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.








