தேயிலை விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கும் நடவடிக்கையை மேலும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில், QR குறியீடு அடிப்படையிலான புதிய முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இன்று (23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாகவும், முதல் கட்டமாக செப்டம்பர் 26ஆம் திகதி மதுகமவில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
2025 ஆம் ஆண்டுக்கான தேயிலை உர மானிய திட்டத்திற்காக ரூ.2,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், ரூ.200 மில்லியன் QR குறியீடு முறைமையிலான மானியமாக வழங்கப்படும் எனவும், இதன் மூலம் மானியம் பெறும் செயன்முறை மேலும் விரைவாகவும், துல்லியமாகவும் அமையுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் தேயிலை உற்பத்தி துறையில் நவீன முறைகளைத் துரிதப்படுத்தும் முயற்சியாக இது காணப்படுகின்றது.








