17-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்திய அணி 9-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற இந்தியா, முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 19.1 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்கு எல்லா விக்கெட்டுக்களையும் இழந்தது.
அணியின் பங்களிப்பாளர்களாக Sahibzada Farhan – 57 ஓட்டங்கள், Fakhar Zaman – 46 ஓட்டங்களை எடுத்தனர்.

இந்திய அணியின் பந்து வீச்சில் Kuldeep Yadav சிறப்பாக விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் வெற்றி இலையான 147 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்திய அணியில் சிறந்த துடுப்பாட்டம் வெளிப்படுத்தியவர்கள் Tilak Varma – ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்கள் Shivam Dube – 33 ஓட்டங்களையும் எடுத்தார்.

பாகிஸ்தானுக்காக Faheem Ashraf 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி மொத்தமாக 9 முறை ஆசிய கிண்ணத்தை வென்ற பெருமையைப் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here