வடமாகாணத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் எதிர்வரும் (26) ஞாயிற்றுக்கிழமை முழு நாளும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
வவுனியா–மன்னார் 220kV மின் பரிமாற்ற இணைப்பை மாற்றியமைக்கும் (Re-conductoring) பணிகள் நடைபெறவுள்ளதால், வவுனியா புதிய–அநுராதபுர 132kV மின் பரிமாற்ற கட்டமைப்பின் கீழ் உள்ள பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும்.
பணிகள் நிறைவடைந்தவுடன் மின்சாரம் உடனடியாக மீள வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை மின்சாரசபை கேட்டுக் கொண்டுள்ளது.








