அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் புறப்படவிருந்த “ரஜரட்ட ரெஜிண” ரயிலின் என்ஜினில் இன்று (25) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில்,
“ரயிலின் என்ஜின் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது எனவும் இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை,” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துக்குப் பிறகு, ரயில் மீண்டும் அனுராதபுரம் ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அதற்கு புதிய என்ஜின் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
காலை 5.00 மணிக்கு புறப்படவிருந்த ரயில், தீ விபத்தால் 2 மணித்தியாலங்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்ட நிலையில், காலை 7.30 மணியளவில் மீண்டும் பெலியத்தையை நோக்கி பயணத்தைத் தொடங்கியதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.








