வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லவாய–தனமல்வில வீதியின் ஆதாவெலயாய பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற இராணுவப் பேருந்தும், எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த மோதலில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் கடுமையாகக் காயமடைந்த நிலையில் வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பெறும் போதே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் வெல்லவாய, ராஜமாவத்தைச் சேர்ந்த 36 வயதான பொலிஸ் சார்ஜென்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் தற்போது வெல்லவாய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







