உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், மொத்தம் 3,500 மெட்ரிக் டொன் பொன்னி சம்பா அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
சுங்கத் துறையின் தகவலின்படி, அதன் முதல் தொகுதி அக்டோபர் 23ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது.
மேலும், இதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுதிகள் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கீரி சம்பா அரிசி பற்றாக்குறைக்கு தீர்வாக, GR 11 வகை பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் அக்டோபர் 15ஆம் திகதி வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில், இறக்குமதியாளர்களுக்கு இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமப் பத்திரம் பெற வேண்டிய தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரையின் பேரில், ஒரு இறக்குமதியாளர் அதிகபட்சம் 520 மெட்ரிக் டொன் அரிசி இறக்குமதி செய்ய அனுமதி பெற்றுள்ளார்.
அதிகாரப்பூர்வ கணக்கீட்டின்படி, நாட்டின் ஆண்டு மொத்த அரிசி நுகர்வு சுமார் 2.4 மில்லியன் மெட்ரிக் டொன், அதில் கீரி சம்பா சுமார் 10 சதவீதம் (200,000 மெட்ரிக் டொன்) ஆகும்.








