ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை நிலையமாக செயற்பட்டு வந்த வீடு ஒன்றை பொலிஸார் நேற்று (26) முற்றுகையிட்டுள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய 56 வயதான பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

ஏறாவூர் பொலிஸார் தெரிவித்ததாவது, சந்தேகநபரிடமிருந்து 5,350 மில்லி கிராம் ‘ஜஸ்’ போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் ரூ. 3 இலட்சத்து 61 ஆயிரம் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், ஏறாவூர் முதலாம் பிரிவிலுள்ள கலைமகள் பாடசாலை வீதிக்கு அருகில் அமைந்திருந்த வீட்டை முற்றுகையிட்டனர்.

விசாரணைகளில், நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்த 56 வயது பெண் வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்றைய தினம் (27) நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here