ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்றுள்ள இலங்கை மருத்துவர்கள் இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக் கொண்டுள்ளார்.
அமைச்சர் சமீபத்தில் மேற்கொண்ட இங்கிலாந்து உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, அங்கு வசிக்கும் இலங்கை மருத்துவர்களைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார சேவையில் தற்போது சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை உள்ளதாகவும் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு சென்ற மருத்துவர்கள் மீண்டும் நாட்டிற்குத் திரும்புமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
வெளிநாட்டில் உள்ள மருத்துவர்கள் திரும்பி நாட்டுக்கு வந்தால் முந்தைய பதவியிலும் சேவைச் சலுகைகளிலும் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.








