உலகளாவிய ரீதியில் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த தெற்காசிய நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலகின் மிகப்பெரிய வாழ்க்கைச் செலவு தரவுத்தளமான நம்பியோ இதனை குறிப்பிடுள்ளது.
இதன் கூற்றுப்படி, வாடகையைத் தவிர்த்து, ஒரு தனிநபரின் வாழ்க்கைச் செலவு மாதத்திற்கு இலங்கையில் $506 (ரூ. 153,899) என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, மளிகைப் பொருட்கள், குழந்தை பராமரிப்பு, உணவு, பள்ளி கட்டணம் மற்றும் பிற வீட்டுச் செலவுகளை சரிசெய்வதற்காகவும் வசதியாகவும் வாழ்வதற்கான மாதாந்திர செலவுகள் வாடகையைத் தவிர்த்து ரூ. 570,997 என மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ‘ஆண்டு பொருளாதார மதிப்பாய்வு இன் படி ,சராசரி வீட்டு நுகர்வுச் செலவு 2023 இல் ரூ. 103,383 இலிருந்து 2024 இல் ரூ. 105,063 ஆக 1.6% ஆக உயர்ந்ததாகக் குறிப்பிடுகிறது. இது 2022 இல் 74.9% மற்றும் 2023 இல் 16.5% உயர்வுகளுடன் ஒப்பிடும்போது வீழ்ச்சியை குறிக்கிறது.
இந்த மிதமான நிலை இருந்தபோதிலும், குடும்பங்கள் அதிக விலைகள் மற்றும் வரிகளின் சுமையை தொடர்ந்தும் அனுபவிக்கின்றனர்.
தெற்காசியப் பட்டியலில் மாலத்தீவுகள் ஒரு நபருக்கு $840 உடன் முதலிடத்தில் உள்ளன.







