மட்டக்களப்பில் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தங்களின் நீண்டநாள் கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் சனிக்கிழமை (01) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் காந்திபூங்காவிற்கு முன்னால் இடம்பெற்றது.
ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் சமத்துவமான ஓய்வூதியம் வேண்டும், ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் 28 வருடங்கள் கடந்துள்ளன, ஓய்வூதிய முரண்பாட்டை தீர்க்க அரசிடம் நீதி கோருவோம் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இன்றையதினம் பிரதமர் ஹரிணி அமரசூரிய மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








