உர மானியங்களைப் பெற்ற பிறகு தங்கள் வயல்களில் பயிரிடத் தவறும் விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் நிதியைத் திரும்பப் பெறும் என்று விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அறிவித்துள்ளார்.

அடுத்த சாகுபடி பருவத்திற்கான மானியங்கள் வழங்கப்படும்போது அத்தகைய விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகை தானாகவே கழிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த நடவடிக்கை பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் விவசாய உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காகவும் அரசு உதவியை முறையாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதனையும்  நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போது, ​​விவசாயிகள் இரண்டு ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்ட நிலத்திற்கு ரூ. 50,000 உர மானியத்தைப் பெறுகிறார்கள். கூடுதலாக, நெல் நிலங்களில் ஊடுபயிர் சாகுபடியில் ஈடுபடுபவர்களுக்கு அதே பகுதிக்கு ரூ. 30,000 தனி மானியம் வழங்கப்படும்.

விவசாய வளங்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும், விவசாய சமூகங்களை ஆதரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதையும் இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here