விதை நெல் உற்பத்தி செய்யும் பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்கு புதிய காப்புறுதித் திட்டம் ஒன்றை விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
விவசாயிகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டம், வெள்ளம், வறட்சி, நோய்கள், பூச்சித் தாக்குதல்கள், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் காட்டு யானை சேதங்கள் ஆகியவற்றிற்கு எதிராக பாதுகாப்பு வழங்குகிறது.
ஒரு ஏக்கர் செய்கைக்காக ஒரு போகத்திற்கு ரூ. 13,600 காப்புறுதி தவணை செலுத்துவதன் மூலம், விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ. 180,000 வரை இழப்பீடாகப் பெறலாம்.
மேலும், இந்தக் காப்புறுதியை பெறும் விதை நெல் பண்ணைகள் கட்டாயமாக விவசாயத் திணைக்களத்தின் விதைப் பதிவுச் சேவையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என சபை வலியுறுத்தியுள்ளது.
விதை நெல் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து, விவசாயிகளைச் செய்கையில் தக்கவைத்துக்கொள்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.








