நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நிதி கொடுப்பனவு நாளை (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, 1,415,738 குடும்பங்களுக்கான கொடுப்பனவு நாளை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

இதற்காக மொத்தம் 11.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here