பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
14 மற்றும் 15 வயதிற்குட்பட்ட பல மாணவர்கள் சிகரெட்டுகளை ‘பரிசோதித்துப்’ பார்க்க முயற்சிப்பது கவலைக்குரிய விடயமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
இவ்வாறு ஆரம்ப வயதிலேயே புகைபிடிப்பது, எதிர்காலத்தில் தீவிர நுரையீரல் நோய்களுக்கு வழிவகுக்கும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.








